search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர் மரணம்"

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் கோபி (40). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் காணாமல் போனதாக அதிகாரிகளிடமும்,பஸ் நிலைய போலீசிலும் கோபி புகார் அளித்தார். இதன் காரணமாக போக்குவரத்து அதிகாரிகள் கோபிக்கு பணி வழங்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு அறையில் இருந்த கோபி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் கோபியை பரிசோதனை செய்த போது கோபி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி வழங்கப்படாததால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபி மாரடைப்பால் உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம் நுங்கம்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். (வயது 50). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சேகர் சேதராப்பட்டு- புதுவை பஸ்சில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது மறைமலை அடிகள் சாலையில் பஸ் சென்ற போது டிரைவர் ‘திடீர் பிரேக்’ போட்டார். இதில் சேகர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×